முதல் வெற்றியை ருசித்த ஐதராபாத் அணி… பஞ்சாப் அணிக்கு முதல் சறுக்கல்.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியுடன், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி மோதியது.
இதில் ‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் மார்க்ரம், பஞ்சாப்பை பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.
கடைசி பந்தில் சிக்சர் அடித்த தவான் 99 ரன்களுடன் (66 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்) களத்தில் இருந்தார். ஐ.பி.எல். வரலாற்றில் 99 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்த 4-வது வீரர் தவான் ஆவார்.
தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் முறையே ராஜஸ்தான், லக்னோ அணிகளிடம் தோல்வியை சந்தித்த ஐதராபாத் அணி, 3-வது லீக்கில் முதலாவது வெற்றியை ருசித்துள்ளது.
அதே சமயம் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி தனது லீக் ஆட்டங்களில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளை போட்டு தாக்கியது. அந்த அணிக்கு இது முதல் சறுக்கலாகும்.