2 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஓமந்தையில் மாட்டிய பெண்!

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை, மூன்று முறிப்பு பகுதியில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஓமந்தை விசேட பொலிஸ் குழுவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வாவின் வழிகாட்டலில் ஓமந்தை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் அருளானந்தம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஓமந்தை பாலமோட்டை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றின் அடிப்பகுதியில், இரண்டு கிலோ கேரளா கஞ்சாவைக் கொண்டு சென்ற பெண்ணை கைதுசெய்துள்ளதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.