வெளிநாடு செல்ல முயன்ற 04 பேர் நடுக்கடலில் வைத்து சிக்கினர்.வேறு கப்பல் மூலம் துறைமுகத்திற்கு அனுப்பிவைப்பு!
பனாமா நாட்டுக்கு சொந்தமான CMA CGMஎன்ற சரக்குக் கப்பல் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 4 தமிழர்கள் கப்பலின் பணியாளர்களால் கைது செய்யப்பட்டு காலி துறைமுக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் நேற்று (10) பிற்பகல் ஒப்படைக்கப்பட்டனர்.
கடந்த மார்ச் 24 அன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலுக்குள் இந்த நான்கு தமிழர்களும் சட்டவிரோதமாக நுழைந்தனர்.
கப்பலில் பயணித்த போது கப்பலின் ஊழியர்களால் அடையாளம் காணப்பட்ட நால்வரும் மார்ச் 26 அன்று கைது செய்யப்பட்டனர்.
பின்னர், கப்பலின் ஊழியர்கள் , நால்வரையும் jakson bay என்ற மற்றொரு கப்பலில் ஒப்படைத்தனர்.
நேற்று (10) பிற்பகல் இலங்கையை அண்மித்த இந்தக் கப்பல் , காலி துறைமுகத்தில் இருந்து 06 கிலோமீற்றர் தொலைவில் நங்கூரமிடப்பட்டுள்ளது. பின்னர், காலி துறைமுகத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்று இந்த கப்பலுக்கு சென்று இந்த நான்கு பேரையும் காலி துறைமுக குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவுக்கு அழைத்து வந்தது.