பிரான்ஸ் கட்டிட விபத்தில் 4 பேர் பலி: தொடரும் மீட்பு பணி.
பிரான்சின் மார்சேய் நகரில் நேற்று அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றியது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அருகில் உள்ள கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
மாலை நிலவரப்படி 4 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 4 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எரிவாயு கசிவு காரணமாக தீப்பற்றி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.