சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நலிவுற்ற பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு புத்தாடை (சாறி) வழங்கும் நிகழ்வு.

உடையார்கட்டு அபிவிருத்தி பேரவையின் (UDUDA) ஏற்பாட்டில், லண்டன் தமிழ்ச்சங்கமும் ஏனைய நலன்விரும்பிகளின் ஏற்பாட்டிலும் நலிவுற்ற 70 பெண்களுக்கான புத்தாடை (சாறி) வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
உடையார்கட்டு தெற்கு பகுதியில், UDUDA தலைவர் திரு.திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு,
பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு சி.ஜெயகாந்த் அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான புடவைகளை வழங்கி கௌரவித்தார்.
குறித்த இந் நிகழ்வில் சமூக நலன்விரும்பிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.