தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது!

தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாகத் திருவாரூர் மாவட்டத்தில் 12 போலி மருத்துவர்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தவறான சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.