இரு தரப்பு மோதலில் கணவன் படுகொலை! – மனைவி படுகாயம்.

இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் அவரின் மனைவி படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குருநாகல், பிங்கிரிய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகொல்லாகம பிரதேசத்தில் நபர் ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
உயிரிழந்தவர் 52 வயதுடைய வல்லவ, நாகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 41 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.