3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி.
ஐ.பி.எல். தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர்.
இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 10 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த படிக்கல் 38 ரன்களும், அடுத்து களமிறங்கிய கேப்டன் சாம்சன் ரன் எடுக்காமலும், அஷ்வின் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடி வந்த பட்லர் அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து ஹெட்மையர் மற்றும் துருஷ் ஷோரல் ஜோடி சேர்ந்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி பவுண்டரிகளை அடித்து நொறுக்கியது.
முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் சிங், தேஷ் பாண்டே மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மொயின் அலி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் கெய்க்வாட் 8 ரன்னில் ஆட்டமிழக்க அவரைத்தொடர்ந்து களமிறங்கி அதிரடி காட்டிய ரகானே 31 (19) ரன்களும், அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 8 ரன்னும், மொயின் அலில் 7 ரன்னும், அம்பத்தி ராயுடு 1 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே 37 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 50 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக ஜடேஜாவுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆடிய இந்த ஜோடி அணியின் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தினர். கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
இறுதியில் ஜடேஜா 25 (15) ரன்களும், தோனி 32 (17) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் சென்னை அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக அஷ்வின், சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சாம்பா மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.