நினைத்தபடி குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப முடியாது – விலங்குகள் அமைப்புகள்
இலங்கை விலங்குகள் இறைச்சிக்காக அல்லது அறிவியல் ஆராய்ச்சிக்காக வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவதற்கு விலங்குகள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சிறிலங்காவிலிருந்து குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் நேற்று (11) இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நிகழ்ச்சிகள் அல்லது விலங்கு பரிமாற்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே இலங்கை விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும் என சுற்றாடல் நிபுணர் கலாநிதி ஜகத் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் முறையான கணக்கெடுப்பு மற்றும் அங்குள்ள பின்னணிகளை ஆராய வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.