தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முடிவுறாத வீடுகளின் தரவுகளை பெறுவதற்கான பொதுக்கூட்டம்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (NHDA) வவுனியா மாவட்டத்தில் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் நிதிக் கொடுப்பனவுகள் இடை நிறுத்தம் காரணமாக பூரணப்படுத்தப்படாத நிலையிலுள்ள வீடுகளை அதற்கான கொடுப்பனவுகளை வழங்கி பூரணப்படுத்தும் நோக்கில் அவ்வாறான குறை வீடுகள் தொடர்பிலான தகவல்களை திரட்டுவதற்கான பொதுக் கூட்டமொன்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் இன்று (7) வவுனியா நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
தகவல்களை திரட்டி அதற்கான கொடுப்பனவுகளை வெகு விரைவில் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ள உள்ளதாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் வவுனியா நகரசபை பிரதி தவிசாளர் திரு.குமாரசாமி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திருமதி. திரவியவதனி, நகர சபை உறுப்பினர் திரு.சலிஷ்டன் முன்னால் நகர சபை உறுப்பினர் ஜனாப்.பாயிஸ் கெளரவ பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் சாபு ஹாஜியார் குறித்த வீட்டுப் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.