துருக்கி-கிரீஸ் எல்லையில் சாலை விபத்தில் 6 அகதிகள் பலி.

துருக்கியில் இருந்து சமீப காலமாக ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது அவர்கள் கடல் அல்லது தரைமார்க்கமாக சட்ட விரோத பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் பல பயணங்கள் ஆபத்தில் முடிகின்றன.

இதேபோல் நேற்று முன்தினம் துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகள் காரில் பயணம் செய்தனர். அவர்கள் துருக்கி-கிரீஸ் எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது அங்கு போலீசாரை கண்டனர். எனவே அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக தவறான பக்கத்தில் அதாவது சாலையின் மறுபுறமாக சென்றனர். அப்போது எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியது.

இதில் காரில் இருந்த டிரைவர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.