டெங்குக் காய்ச்சலால் பெண் இராணுவச் சிப்பாய் உயிரிழப்பு!

டெங்குக் காய்ச்சல் காரணமாக குருநகர் இராணுவ முகாமில் பணிபுரிந்த பெண் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பைச் சேர்ந்த எம்.கே.செவ்வந்தி (வயது – 23) என்பவரே உயிரிலழந்தவராவார்.
இம்மாதம் 5ஆம் திகதி ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மறுநாள் பலாலி இராணுவ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டெங்குக் காய்ச்சல் என மருத்துவப் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அவர் கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்தநிலையில் அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.