ரணிலின் யோசனையை நிராகரித்தது சுதந்திர மக்கள் சபை!

தேசிய இணக்கப்பாட்டு அரசொன்றை அமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பை ஏற்காதிருக்க டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை தீர்மானித்துள்ளது.
டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உட்பட மொட்டு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்தே சுதந்திர மக்கள் சபையை நிறுவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், மத்திய வங்கிச் சட்டம் போன்ற விடயங்களில் கொள்கையளவில் உடன்பட முடியாது என்பதாலேயே தேசிய அரசு யோசனையை நிராகரிக்க டலஸ் அணி தீர்மானித்துள்ளது.
அதேவேளை, பரந்துபட்ட எதிரணிக் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு டலஸ் அணி போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.