4 அரச நிறுவனங்களுக்கு கோப் குழு அழைப்பு!

அடுத்த வாரத்தில் கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு நான்கு அரச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காணி சீர்திருத்த ஆணைக்குழு, தொழிற்பயிற்சி அதிகார சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கோப் குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிதி நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்காத 19 அரச நிறுவனங்களைக் கோப் குழுவுக்கு அழைக்கவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நிதி நிலை அறிக்கை வழங்கப்படாமைக்கான காரணம் குறித்து இதன்போது ஆராயப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.