காலிமுகத்திடல் தடை செய்யப்பட்ட பகுதி.
ஏப்ரல் (20) முதல் காலிமுகத்திடலில் இசை நிகழ்ச்சிகள் அல்லது அரசியல் சந்திப்புகள் எதுவும் நடைபெறாது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பொதுமக்கள் சுதந்திரமாக பொழுதை கழிக்க காலிமுகத்திடல் ஒதுக்கப்படும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு சமூகப் பொறுப்புத் திட்டமாக (CSR) இலங்கை துறைமுக அதிகாரசபை காலி துறைமுக அதிகாரசபையின் அபிவிருத்தியை முன்னெடுத்துள்ளதுடன், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக சுமார் 220 மில்லியன் ரூபாவை அந்த அதிகார சபை செலவிட்டுள்ளது.
கடந்த போராட்ட காலத்தில் ஏற்பட்ட சொத்து சேதங்களை சீர் செய்ய மாத்திரம் 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, பொதுமக்கள் அதிகம் கூடுவதால் காலிமுகத்திடல் அடிக்கடி சேதமடைவதுடன், அப்பகுதியின் அழகையும், இயற்கை எழில் கொஞ்சும் தன்மையையும் பராமரிப்பதில் சிரமம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.