உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவும் அரசின் உள்ளகப் பொறிமுறை வெற்றியளிக்கும்! – தினேஷ் கூறுகின்றார்.

உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவும் அரசின் உள்ளகப் பொறிமுறை வெற்றியளிக்கும் என்று நம்புவதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உள்ளகப் பொறிமுறைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இதை எதிர்ப்பவர்கள் தங்களுடைய கருத்துக்களைப் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும். அதற்கான காரணத்தையும் அவர்கள் விலாவாரியாக முன்வைக்கவேண்டும்.
நாடாளுமன்றத்தில் சட்டவரைவு நிறைவேறும்போது அதன் ஊடாகத்தான் அரசு அந்தப் பணிகளை முன்னெடுக்கும். இந்த அரசினுடைய நடவடிக்கை வெற்றியளிக்கும் என்று நம்புகின்றேன்.” – என்றார்.