பொலிகண்டியில் இளம் யுவதி உயிர்மாய்ப்பு!

யாழ்., வடமராட்சி – பொலிகண்டிப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் விபரீத முடிவால் இன்று (19) சாவடைந்துள்ளார்.
பொலிகண்டி – ஆலடி பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திராசா பிரியா (வயது 22) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
இது குறித்த விசாரணைகளைப் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.