1379 கிலோ மஞ்சள் கட்டிகளுடன் ஒருவர் கைது.

மன்னாரில் 1379 கிலோ மஞ்சள் கட்டிகளுடன் ஒருவர் மன்னார் பொலிஸாரினால் கைது.
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று(7) திங்கட்கிழமை மாலை மன்னார் சாந்திபுரம் பிரதான வீதியில் வைத்து ஒரு தொகுதி மஞ்சள் கட்டிகளுடன் மன்னார் பகுதியை சேர்ந்த ஒருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.