இந்திய வர்த்தக அமைச்சருடன் இலங்கைத் தூதர் நேரில் பேச்சு.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்திய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்துள்ளார்.
புதுடில்லியில் உள்ள வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த பெப்ரவரியில் அவர்கள் இருவரும் கலந்துரையாடிய விடயங்களின் மேம்பட்ட சந்திப்பாகவே இது அமைந்திருந்தது.
இரு தரப்பு வர்த்தகத்தின் விரிவாக்கம், இலங்கை இடையே ரூபா வர்த்தகத்தை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியா, இலங்கையின் பொருளாதார மீட்சியில் வகிக்கக்கூடிய முக்கிய பங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.