இந்தோனேசியா அருகே 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

இந்தோனேசியாவின் அருகே அமைந்துள்ள மொலுகா கடலின் வடக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. 3.00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.