சூரிய சக்தி சாதனம் வழங்கும் நிகழ்வு.

இவ் வருட சிறுபோக நெல் அறுவடை நிறைவடைந்து, பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்படுவதற்கிடையிலான சுமார் மூன்று மாத கால இடைவெளியில் வெற்று நிலமாகக் கிடக்கும் நெற்காணிகளில் மூன்றாம் போக பயிர் செய்கையான பாசிப்பயறு சம்மாந்துறை பிரதேசத்தில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பயிர் செய்கையை ஆடு,மாடு,முயல்,பன்றி,குரங்கு போன்ற விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் முகமாக சூரிய சக்தி மூலம் வேலிகளுக்கு மின்னை வழங்கக்கூடிய சூரிய சக்தி சாதனம் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (07) சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரியும் விவசாய போதன ஆசிரியருமான ஐ.எல்.பெளசுல் அமீன் தலைமையில் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது.

இன் நிகழ்வில் விசேட அதிதியாக விவசாய குழு தலைவர் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம் நெளசாத்,சம்மாந்துறை நீர்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் எம்.நவாஸ் அம்பாறை மாவட்ட கரையோரத்திற்கு பொறுப்பான உப உணவு பயிர் செய்கையின் பாடவிதான உத்தியோகத்தகர் எஸ்.எச்.எ நிஹார் மற்றும் துறை சார்ந்த பல்வேறு அதிகாரிகள் மூன்றாம் போக பயிர்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

விவசாய திணைக்களத்தினால் இலவசமாக அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்திற்கு சூரிய சக்தி மூலம் வேலிகளுக்கு மின்னை வழங்கக்கூடிய 18 சூரிய சக்தி சாதனம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.