வெயில் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் : வானிலை மையம் எச்சரிக்கை..!
நேரடி வெயிலில் செல்வது அசௌகரித்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கழிக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிற. இதன் காரணமாக, ஏப்ரல் 22 முதல் 25 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்ரல் 22-ல் (இன்று) தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் என வானிலை மையம் கணித்துள்ளது.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது நேரடி வெயிலில் செல்வது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பாதிப்பு உள்ளவர்களுக்கு வெப்ப அழுத்தம் காரணமாக சோர்வு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.