ITN பொறுப்பாளர் ஒருவரது பாலியல் துன்புறுத்தலால் வேலையை விட்டு விலகினார் இஷாரா தேவேந்திர!
ITN தொலைக்காட்சியின் இலங்கையின் தலைசிறந்த செய்தி வாசிப்பாளராக கருதப்படும் இஷாரா தேவேந்திர, அரச ஊடகத்தின் முதன்மையான சுயாதீன தொலைக்காட்சி சேவையில் மோசடி வழக்கு தொடர்பாக நாடு முழுவதும் அறியப்பட்டும் , முக்கிய பதவியை வகிக்கும் ஒருவரின் தொடர்ச்சியான பாலியல் அழுத்தம் காரணமாக தனது வேலையை விட்டு விலகியுள்ளார் .
ஃபேஸ்புக் பதிவில், இஷாரா தனது வாழ்க்கையில் சுயமரியாதையை முதன்மையாக கருதி தனது வேலையை ராஜினாமா செய்ததை வெளிப்படுத்தியுள்ளார்.
அரசு தொலைக்காட்சியில் பணிபுரியும் வயதான இந்த நபரின் துன்புறுத்தல்களால் , தனக்கு ஏற்பட்ட அவமானகரமான விளைவுகள் குறித்து வீடியோக்கள் மற்றும் ஓடியோ மூலம் ஐடிஎன் நிர்வாக அதிகாரிக்கு தெரிவித்தேன். ஆனால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமையால் நான் தொலைக்காட்சியை விட்டு விலகினேன் என மேலும் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நபரின் மனைவியிடமும் இஷாரா வெளியேறுவதற்கு முன் , அந்த நபரது அநாகரீக நடத்தைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஷாரா வைத்துள்ள முகநூல் பதிவு பின்வருமாறு;
எனக்கு பிடித்த வேலையை எனது சுயமரியாதைக்காக விட்டுவிட்டேன்…
இந்தக் கதையை 15.03.2023 அன்று சொல்ல விரும்பினேன்.
ஆனால் ஏன் செய்தி சொல்லுவதில்லை, ஏன் பத்திரிக்கை செய்தியில் வருவதில்லை என்று பலர் கேட்பதால் இன்று இந்த கதையை சொல்கிறேன்…
2008 ஆம் ஆண்டு ஒரு குழந்தை செய்தி தொகுப்பாளராக, நான் அன்று ஊடக வாழ்க்கையில் நுழைந்து , 2023.03.15 வெளியேற முடிவு செய்தது , சோகத்துடன் கூடிய ஒரு பெரிய ஏமாற்றமே.
நான் எப்போதும் என் வேலைக்கு மேல் என் சுயமரியாதையை காக்க பாடுபடுபவள். தனியாக வாழ்வதால் ஒரு பெண் ஒருபோதும் வேசியாக மாற மாட்டாள். அதைப் புரிந்து கொள்ளாத பலம் பொருந்திய முதியவர்கள் சிலர் மத்திய நிறுவனங்களில் பெரிய நாற்காலிகளில் அமர்ந்துள்ளனர் .
நானும் பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளேன்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வாழ்க்கையில் அரியஸ் உள்ள வயதான ஆண்கள் இந்த நிறுவனத்தில் இருக்கின்றனர். மேலும் உயர்ந்த நிலைக்கு நீ செல்ல வேண்டுமானால் , நீ என்னுடையதாக இருக்க வேண்டும் என்று கூறும் காட்டுமிராண்டிகள். வெற்றுவேட்டுகள், கற்பனையில் பெரியவர்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் அற்ப பிறவிகள். யாராவது கஷ்டத்தில் இருக்கும்போது, அதைப் பயன்படுத்திக் கொண்டு உதவிக்கு வரும் முதலாளிகள்…
இவை பற்றிய ஆதாரங்களுடனும் ஓடியோ வீடியோ பதிவுடனும் நான் அதிகாரிகளிடம் தெரிவித்தும் , இன்றும் யாரும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.. இது எனக்கு மட்டும் நடந்த விஷயம் இல்லை என்பது ஒட்டுமொத்த நிறுவனத்துக்கே தெரியும்.
டி.வி.யில் முகம் காட்ட வேண்டும் என்ற ஆசையில் , வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் வந்த எத்தனையோ யுவதிகள் இந்த கிழவர்களால் மன வேதனை அடையும் நிலைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் யாரும் குரல் எழுப்பவில்லை, பேசவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு வேலை தேவை. இல்லையென்றால் அந்த பெண்கள் இந்த கிழவர்களுக்கு பயப்படுகிறார்கள். அந்த கிழவர்களது Meetingகளில் பெண்களை சூழ்ந்து கொண்டு double meaningல் பேசி சிரிப்பதை தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார்கள். அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்காகப் பேச ஒரு பெண்ணுக்குக் கூட சக்தி இல்லை. அவர்கள் அனைவரும் நண்பர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால், இன்றும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை, எனது மனநலம் கருதியும், என் சுயமரியாதை எனக்கு முதலிடம் என்பதாலும், எனது 15 ஆண்டுகால ஊடகப் பணியை இப்படியே முடித்துக் கொள்ள முடிவு செய்தேன்.
இது ஊடகங்களில் மட்டுமல்ல, இந்த நாட்டில் இது முதல் சம்பவமோ, கடைசி சம்பவமோ அல்ல. பதவிகளுக்கு யார் வந்தாலும் இவற்றை மாற்ற முயற்சிப்பார்களா என்பதில் பெரும் சந்தேகம் உள்ளது.
எனவே உங்கள் மகள், மனைவி, சகோதரி, தங்கையை இப்படிப்பட்ட கேடுகெட்ட செயலில் சிக்க விடாதீர்கள். நான் விலகி வரும் போதும், முன்னாள் அதிகாரிகளிடம் நான் விடுத்த ஒரே வேண்டுகோள், நாளை எனக்கும் மற்ற பெண்களுக்கும் கொடுத்த மன வேதனையையும் தாக்கத்தையும் நாளையும் தொடராதீர்கள் என சொல்லிவிட்டே பணியிடத்தை விட்டு வெளியேறினேன்: அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று நான் நம்புகிறேன்.
இஷாரா தேவேந்திர மேல் அன்பு காட்டியமைக்கும் …. எனது செய்தி வாசிப்பை நேசித்து பார்த்தமைக்கும் நான் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.
அவர் ரூபவாகிணியில் இருந்தபோது ….