5 பேருடன் சென்று 18 வயது பெண்ணை கடத்திய 19 வயது இளைஞன் கைது! (Video)

சிலாபம் மனுவங்கம பகுதியில் வைத்து 19 வயதுடைய திருமணமான மனைவியை வேனில் கடத்திச் சென்ற கணவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணை கடந்த 19ஆம் திகதி காலை 5 பேர் கொண்ட குழுவொன்று கடத்திச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது, 18 வயதான பெண் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 4 சந்தேக நபர்களை தேடி விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
18 வயதுடைய குறித்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு கணவரின் தொல்லை காரணமாக பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் கடத்தப்பட்டிருந்தார்.
முன்னைய செய்தி:
மனைவியைக் கடத்திச் சென்ற கணவனை தேடுகிறது போலீஸ்