வடகொரிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த தயாராகிறது ஜப்பான்
ஜப்பான் எல்லையில் விழக்கூடிய வடகொரியாவின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தவும், ஏவுகணை இடைமறிப்பு கருவிகளை செயல்படுத்தவும் தயாராகும்படி ராணுவ வீரர்களுக்கு அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
இதுதொடர்பாக ஜப்பானிய மந்திரி யசுகாசு ஹமாடா நாட்டின் தற்காப்புப் படைகளிடம், “பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பிறவற்றுக்கு எதிராக அழிவுகரமான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.