சமூக தொற்று தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

சமூக தொற்று தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

Covid-19 வைரஸ் தொற்று இலங்கையை பொறுத்தவரை தற்பொழுது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது எனினும் வடக்கு மக்கள் சமூக தொற்று தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளதாக தெரிவித்த பணிப்பாளர் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளியினைப்பேணி சமூகத் தொற்று ஏற்படாவண்ணம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அரேபிய நாடுகளில் இருந்து நாடு திரும்புவர்கள் வடக்கில் பல்வேறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
சமூகத்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் இனங்காணப்படாத போதிலும், மக்கள் சமூக தொற்று தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்
எனவும் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.