ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 10 வருடங்களுக்கு மேலாக ஜி ஸ்கொயர் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது. இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுகவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது பாஜக குற்றம்சாட்டியது. இந்த நிலையில் இன்று காலை முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜி ஸ்கொயர் தலைமை அலுவலகத்திற்கு வருமான வரி அதிகாரிகள் வந்தனர். ஆனால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் காத்திருந்து அதன்பிறகு சோதனையை தொடர்ந்தனர். இதுபோலவே கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
மூன்று வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐதராபாத்திலும் 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ மோகன் வீட்டிலும், அவரது மகன் கார்த்திக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். அவர்கள் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தவர்கள். நீலாங்கரையில் உள்ள ஜி ஸ்கொயர் உரிமையாளர் பாலா வீட்டிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் . திமுக கட்சியினர் தற்பொழுது மத்திய அரசுக்கு எதிராக முழுக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.