பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: ஒன்றிணைந்தன எதிரணிகள்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உட்பட அரசின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்க்கட்சிகள் இணக்கத்துக்கு வந்துள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திர மக்கள் சபை (டலஸ் அணி), உத்தர லங்கா சபாகய (விமல் அணி), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, அநுர பிரியதர்சன யாப்பா அணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவைத் தோற்கடிப்பதற்கும், அதற்குப் பதிலாக புதியதொரு சட்ட வரைவை அறிமுகப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றியும் இதன்போது பேசப்பட்டன.