ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு !

பொது அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து இராணுவ வீரர்களையும் அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாராளுமன்றம் இன்று (25) கூடிய போது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி 40ஆவது அதிகாரசபையாக இருந்த பிரதி சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.