ஆட்சிக்கு வந்த எல்லா அரசுகளும் திருடின! – ரில்வின் சில்வா கருத்து.

“ரணில் விக்கிரமசிங்க, விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தம் செய்து நாட்டைப் பிரிப்பதற்குத் தயாரான போது அதைத் தோற்கடிப்பதற்காகவே நாம் மஹிந்தவை அன்று ஜனாதிபதியாக்கினோம்” – என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மஹிந்த ராஜபக்சவை 2005 இல் நாம் ஜனாதிபதியாக்கியதும் அவர் பின்னர் திருடியதும் ஒரே விடயம் அல்ல. வேறு வேறு விடயம்.
நாம் மஹிந்தவை ஜனாதிபதியாக்கியது திருடுவதற்கு என்றால் அதை நாம் பாரமேற்போம். ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தம் செய்து நாட்டைப் பிரிப்பதற்குத் தயாரான போது அதைத் தோற்கடிப்பதற்காகவே நாம் மஹிந்தவை அன்று ஜனாதிபதியாக்கினோம்.
ஆனால், மஹிந்த ஆட்சிக்கு வந்ததும் திருடத் தொடங்கினார். அதற்கு எதிராகவும் நாம் போராடினோம். பின்னர் அவரைத் தோற்கடிப்பதற்காகக் களமிறங்கினோம்.
1977 இற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த எல்லா அரசுகளும் ஊழல், மோசடிகளைச் செய்தே உள்ளன. ஆனால், ஜே.வி.பி. ஆட்சிக்கு இந்த ஊழல், மோசடிகளுக்கு உடன் முற்றுப்புள்ளி வைத்துவிடும்.” – என்றார்.