எதிர்ப்புக்களையடுத்துப் புதிய பயங்கரவாதச் சட்டமூலம் மேலும் தாமதமாகலாம்!
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புக்கள் வலுத்துவரும் நிலையில், அந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை அரசு தாமதப்படுத்தியுள்ளது.
மேற்படி சட்டமூலம் முதலாம் வாசிப்புக்கென இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடு நிலவுகின்றது.
எனவே, பரந்தபட்ட கலந்துரையாடலுக்கு களம் அமைக்கும் வகையிலேயே சட்டமூலம் முன்வைக்கப்படுவது தாமதப்படுத்தப்பட்டுள்ளது.