பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி காலமானார்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி (55) புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார். ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு என அஜித் நடிப்பில் மொத்தம் 9 படங்களை சக்ரவர்த்தி தயாரித்துள்ளார்.
கடந்த 8 மாதங்களுக்கு மேலாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவரது உயிர் பிரிந்தது. விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு, சிம்பு நடித்த காளை, வாலு ஆகிய படங்களையும் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்துள்ளார்.
இறுதியாக விமல் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த விலங்கு என்ற இணைய தொடரில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார். எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது. எஸ்.எஸ்.சக்ரவர்த்தி மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.