மனதின் குரல் 100வது நிகழ்ச்சியில் தமிழ் நாட்டு பெண்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் மக்களிடம் பேசுவது வழக்கம், அப்படி இதுவரை 99 முறை பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றியுள்ளார்.
கடந்த 99 தொகுப்புகளில் தமிழ்நாடு குறித்தே பிரதமர் மோடி அதிகம் பேசி உள்ளார். குறிப்பாக தமிழ் இலக்கியம் மற்றும் மொழியின் ஆழம் குறித்து நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பல்வேறு தகவல்களை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். தமிழ் மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களின் சாதனைகளையும் பிரதமர் மோடி பல முறை நாட்டு மக்களிடம் பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் நூறாவது முறையாக இன்று மக்களிடம் பேசினார். அப்போது தமிழ்நாட்டு பெண்கள் குறித்து புகழாரம் தெரிவித்தார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டின் பழங்குடியினப் பெண்கள் சூழலுக்கு உகந்த மண்குவளைகள் தயாரித்து வருகின்றனர். வேலூரில் 20,000 பெண்கள் ஒன்றிணைந்து நாக நதியை தூர்வாரி சீரமைத்து மீட்டெடுத்துள்ள பெருமைக்குரியது என்று பேசினார்.