அருண் சித்தார்த்தனின் சாகாக்களால் போலீசாருக்கு கொலை மிரட்டல்
யாழ்பாணத்தில் அரசியல் செயற்பாட்டாளராகக் காட்டிக் கொள்ளும் அருள் சித்தார்த்தின் ஆதரவாளர்கள் இருவரை பொலிஸார் கைது செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதை தடுக்குமாறு அரசியல் அதிகாரங்களால் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் போலீஸ் அதிகாரிகளை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
நேற்று (29) யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் போக்குவரத்துச் சோதனையில் ஈடுபட்டிருந்த வேளையில், அவ்வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது சந்தேகநபர்கள், இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சந்தேக நபர்களை கைது செய்ய தயாரான போது, சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்த ஆவணங்கள் சிலவற்றையும் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் கோபமடைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் யாழ்.நீதிமன்றத்தில் உண்மைகளை தெரிவித்ததையடுத்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த யாழ்.நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவையும் மீறி, சந்தேகநபர்களின் மோட்டார் சைக்கிளை மீட்டுத் தருமாறும், சந்தேகநபர்களை கைது செய்யக் கூடாது என்றும் கோப்பாய் பொலிஸாருக்கு அரசியல்வாதிகள் உட்பட பெருமளவான மக்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு சந்தேகநபர்களின் தலைவன் என கூறப்படும் அருள் சித்தார்த்தன் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் என்பதால் மே 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.