அஜீத் ரஜினி நட்பு இதுவரை வெளிவராத தகவல்…

“ரஜினி எனக்கு கடவுள் போல,
என் தாய் தந்தையருக்கு
அடுத்தபடியாக நான் மதிப்பது ரஜினியைதான்” என்கிறார் அஜீத்,

அஜீத் சம்பந்தப்பட்ட விழா என்றால் கண்டிப்பாக வருகிறார்
ரஜினி, சென்ற ஆட்சியில் முதல்வர் இருக்கும் மேடையில்
தன்னுடைய கருத்தை தைரியமாக சொன்ன அஜீத்துக்கு எழுந்து
நின்று கைதட்டி தன்னுடைய ஆதரவை தெரிவிக்கிறார் சூப்பர்ஸ்டார்.

இந்த இரு பெரும் மனிதர்களுக்குள் இருக்கும் ஆழ்ந்த நட்புக்கு
காரணம் என்ன?

எல்லோரும் நினைப்பது என்னவென்றால்
அஜீத் ஒரு ரஜினி ரசிகர். ரஜினி, தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலேயே ஒரு
தவிர்க்க முடியாத சக்தி ஆகவே,
அஜித் ரஜினிக்கு நெருக்கமாக இருக்கிறார் என்பதுதான்.

ஆனால்…
அதையெல்லாம் தாண்டிய ஒரு பாசப்பிணைப்பு அஜிக்கும் ரஜினிக்கும் இருக்கிறது. “ரஜினி எனக்கு
கடவுள் போல” என்று அஜீத் சொல்வது அதிகபட்சமாக தோன்றாலாம்
ஆனால் அது அஜித்தின்
இதழ்களிலிருந்து வரும் வார்த்தைகளல்ல; இதயத்திலிருந்துவரும் வார்த்தைகள்,

“ஞாலத்தின்
மானப்பெரிது” என்று வள்ளுவர் சொன்னதுதான் அஜீத், ரஜினிமேல் வைத்திருக்கும் பக்திக்கு காரணம்.
நான் கடவுள் படத்திலிருந்து அறித் நீக்கப்பட்டு, அவர் வாங்கிய அட்வான்ஸ் தொகையை உடனடியாக
கொடுக்க வேண்டி நிர்பந்திகப்பட்டதை அவ்வளவு சீக்கிரம் அஜீத் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

அப்போது ஒரு பெரும் தொகையை கடனாக கொடுத்தவரின் இறுதி ஊர்வலத்தில் அஜீத் கலந்து கொண்டு
ரோட்டில் நடந்து சென்றது அனைவரும் அறிந்ததே, ஆனால் அஜீத் அவரிடம் முழுத்தொகையையும்
கேட்டு அவரை சங்கடத்தில் ஆழ்த்த விரும்பாமல் ஒரு குறிபிட்ட தொகையை மட்டுமே கடனாக கேட்டார்.

அவரும் கொடுத்டார் பாக்கி தொகைக்கு அலைந்து கொண்டிருந்த அஜீத்து வந்தது. ஒருபோன்கால், பேசியது சூப்பர் ஸ்டார், உடனே வந்து என்னைபாருங்கள் என்று சொல்லிவிட்டு போனை
வைத்துவிட்டார்.

ரஜினியை சந்தித்த அஜித்திடம் என்ன பிரச்சினை என்று கேட்டார் ரஜினி, சொன்னார்அஜீத்,

ஒரே செக்கில் முழுத்தொகையையும் எழுதி கொடுத்த ரஜினி, முதலில் கடனை அடையுங்கள் பிறகு மற்றதை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினார். இந்த விசயத்தை எப்போதும் யாரிடமும் ரஜினி சொன்னதில்லை. அஜீத்தையும் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்,

அப்போது ரஜினி
அஜீத்துக்கு கொடுத்தது பணம்
மட்டுமல்ல, அதையும் தாண்டியது. இக்கட்டுரையின் முதல் வரியை
படித்தால் அஜீத் சொல்வது சரிதான்
என்று தோன்றும்.

அஜித்குமார் அவர்களுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்….

Leave A Reply

Your email address will not be published.