கட்சியில் இருங்கள்; இல்லையேல் வெளியேறுங்கள்! – சகாக்களுக்கு சஜித் எச்சரிக்கை

“நாம் பதவிகளுக்காக அரசியல் செய்யவில்லை. மாறாக மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியல் களத்தில் இருக்கின்றோம்” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரச பதவிகளுக்காக அலையும் சில மக்கள் பிரதிநிதிகளும் இருக்கவே செய்கின்றனர். அப்படியானவர்களுக்கு தெளிவாக ஒரு விடயத்தை குறிப்பிடுகின்றேன், எல்லா பக்கங்களிலும் கால் வைக்க வேண்டாம். ஒன்று கட்சியில் இருங்கள், இல்லையேல் வெளியேறுங்கள்.
இரட்டை நிலைப்பாடு அரசியல் நடத்த வேண்டாம். கொள்கை அற்றவர்களுக்கு எமது கட்சியில் இடமில்லை.” – என்றார்.