சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவு.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுன்னான் மாகாணம் பவோஷான் நகரில் நேற்று முன்தினம் இரவு 11.27 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தின்போது சில வினாடிகளுக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் அதிர்ந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி அலறியடித்துக் கொண்டு வீதிகளில்தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் அல்லது பொருட் சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.