ரஷியா அனுப்பிய 18 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினோம்.
ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளினைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும், அது வீழ்த்தப்பட்டதாகவும் ரஷியா கூறியது.
அத்துடன், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் எனவும், அதிபர் புதினை கொலை செய்யும் முயற்சி என்றும் குற்றம்சாட்டியது. தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தது. இந்த குற்றச்சாட்டை உக்ரைன் நிராகரித்திருந்தது. இந்நிலையில்,
நேற்று இரவு உக்ரைன் மீது ரஷியா 24 ட்ரோன்களை அனுப்ப தாக்குதல் நடத்தியதாகவும், அவற்றில் 18 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் விமானப்படை கூறியிருக்கிறது. மே மாதத்தில் மூன்றாவது முறையாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவ நிர்வாக தலைவர் செர்ஜி பாப்கோ தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுபோன்ற தீவிரமான தாக்குதலை பார்த்ததில்லை. சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் பாகங்கள் கீவ் நகரின் பல்வேறு பகுதிகளில் சிதறின. ஆனால் இதில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் பாப்கோ கூறினார்.