ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது குஜராத்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 118 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் அணியின் துல்லியமான பந்துவீச்சில் ராஜஸ்தான் சிக்கியது. கேப்டன் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 30 ரன்னும், டிரெண்ட் போல்ட் 15 ரன்னும் எடுத்தனர்.
குஜராத் சார்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விரித்திமான் சகா, ஷுப்மன் கில் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தனர். ஷுப்மன் கில் 36 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடினார். சகா 41 ரன்னும், பாண்ட்யா 39 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர். இறுதியில், குஜராத் அணி 13.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிப்பட்டியலிலும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.