தெலுங்கானாவில் 15 வருடங்களாக வற்றாத அதிசய ஆழ்துளை கிணறு!
தெலுங்கானாவை சேர்ந்த ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரின் விளை நிலத்தில் எந்த வித மின்மோட்டார் வசதியும் இல்லாமல், ஆழ்துளை கிணற்றிலிருந்து பெருக்கெடுக்கும் நீரில் மூலம் தனது நீர் தேவையை அவர் பூர்த்தி செய்து வருகிறார்.
உலகெங்கிலும் நீர் பற்றாக்குறை என்பது மிகப் பெரும் அளவில் உருவெடுத்து வருகிறது. குறிப்பாக மனிதர்களுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்வதற்கு ஆதாரமாக விளங்கும் விவசாய தொழிலை சரிவர செய்வதற்கு போதுமான நீர் விவசாயிகளுக்கு கிடைப்பதில் மிகப் பெரும் அளவில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மேலும் உலக வெப்பமயமாதலின் காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் வற்றி காணப்படுவதால் பல்வேறு விவசாயிகளும் தங்களது விளைநிலத்தில் ஆழ்துளை கிணறுகள் மூலம் தங்களது நீர் பற்றாக்குறையை சரி செய்யும் முயற்சி செய்கின்றனர். ஆனால் சில சமயங்களில் எவ்வளவு ஆழத்திற்கு ஆழ்துளை கிணற்றை உண்டாக்கினாலும் நிலத்தடி நீரானது கிடைக்காமல் போகிறது.
நிலைமை இப்படி இருக்க தெலுங்கானாவை சேர்ந்த ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரின் விலை நிலத்தில் எந்த வித மின்மோட்டார் வசதியும் இல்லாமல், ஆழ்துளை கிணற்றிலிருந்து பெருக்கெடுக்கும் நீரில் மூலம் தனது நீர் தேவையை அவர் பூர்த்தி செய்து வருகிறார்.
குண்டா ரங்கா ரெட்டி எனும் அவர், முழுகு மாவட்டத்தில் உள்ள கோவு பள்ளி என்னும் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். மேலும் கடந்த 15 வருடமாக தங்களது முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த பரம்பரை சொத்தான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து தனது வாழ்வை நடத்தி வருகிறார்.
விவசாயத்தில் அதிக ஆர்வம் இருந்தாலும் போதுமான நீர் வசதி இல்லாமையால் தன்னுடைய விளைநிலத்தில் ஆழ்துளை கிணறு ஒன்றை தோண்டுவதற்கு முடிவு செய்துள்ளார். ஆழ்துளை கிணற்றை அமைத்து அதன் மீது மின்மோட்டார் ஒன்றை பொருத்தி விவசாய நிலத்திற்கு நீர் பாசனம் செய்வதே அவரது திட்டமாக இருந்துள்ளது.
யாரும் எதிர்பாக்காத வகையில் அதிர்ஷ்டவசமாக ஆழ்துளை குழாயில் இருந்து எந்த வித மின் மோட்டார் வசதியும் இல்லாமல் நீரானது பெருக்கெடுத்து ஓட துவங்கியுள்ளது.
கடந்த 15 வருடங்களுக்கு முன் இந்த ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 15 வருடங்களாகவே இதில் எப்போதும் நீர் வறட்சி ஏற்படவில்லை என்பதும், மொத்தம் இருக்கும் 15 ஏக்கர் விவசாய நிலத்திற்குமே இந்த ஆழ்துளைகிணறுதான் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுற்றியுள்ள காடுகளின் பலத்தினால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகம் இருப்பதாகவும், அதனாலையே தங்கு தடை இன்றி இவரால் நீர் பாசனம் செய்யப்படுகிறது என்றும் நம்பப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ரங்காரட்டியின் இந்த பண்ணையானது சுற்றுலா பயணிகள் அனைவரையும் ஈர்க்கும் ஒரு சுற்றுலா தலமாகவும் மாறி வருகிறது.
சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள பலரும் இந்த அதிசயத்தக்க ஆழ்துளை கிணற்றை அவ்வபோது பார்வையிட்டு செல்கின்றனர். 15 ஏக்கர் நிலப்பரப்பிற்கும் ஒரே நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஆழ்துளை கிணறு உண்மையிலேயே அதிசய தக்க ஒன்றுதான் என்று அனைவரும் வியக்கின்றனர்.