மணிப்பூர் வன்முறை : 1,700 வீடுகள் தீயிட்டு எரிப்பு, 60 பேர் உயிரிழப்பு..
மணிப்பூர் வன்முறையில் அப்பாவி பொதுமக்கள் 60 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
மொய்தி சமூகத்தினரைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு மணிப்பூரில் வன்முறை வெடித்தது. இதனால் ஏற்பட்ட மோதல் கலவர பூமியாக மாறியது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. வன்முறை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங், வன்முறையில் 60 பேர் உயிரிழந்ததாகவும், 231 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறினார். மேலும் 1,700 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்தார்.
பாதுகாப்பான இடங்களிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டவர்கள், அவர்களது சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த நாள் முதல் தற்போது வரை நிலைமை பற்றி உள்துறை அமித் ஷா, கண்காணித்து வருவதாகவும் கூறினார். இதனிடையே, மணிப்பூர் மாநிலத்தில் இணையச் சேவைக்கு விதிக்கப்பட்ட தடை மார்ச் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.