2.25 லட்சம் செல்லிடைபேசி எண்களை நீக்கி நடவடிக்கை
பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மோசடியான ஆவணங்களை அளித்துப் பெற்ற 2.25 லட்சம் செல்லிடைபேசி எண்களை தொலைத்தொடர்புத் துறை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
மோசடியான ஆவணங்களை பெற்றுக்கொண்டு சிம் கார்டுகளை வழங்கியதாகக் கண்டறியப்பட்ட 517 கடைகளுக்கும் சிம் கார்டுகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், போலியான ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட 2.25 லட்சம் செல்லிடைபேசி எண்கள் நீக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புத் துறை சிறப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதே விவகாரத்தில் பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.