லால் சலாம் படத்தின் கதை என்ன? ரஜினி ஏன் ஒகே சொன்னார்!
லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி நேற்று இணையம் முழுவதும் வைரலாக பரவியது. போஸ்டரில் ரஜினியின் கேரக்டர் சரியாக கையாளப்படவில்லை என்று குற்றச்சாட்டு இருந்த நிலையில் இந்தப் படத்தின் கதை என்ன என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து பேசிய பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், லால் சலாம் திரைப்படம் பாட்ஷா லெவலுக்கு இருக்கும் என எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார். ரஜினி இந்த படத்தில் ஹீரோவாக இல்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்ததற்கு காரணம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இந்த கதையை லைக்கா நிறுவனத்திடம் கூறியிருக்கிறார். அப்போது லைக்கா நிறுவனம் இந்த படத்தில் உங்கள் தந்தை நடித்தால் தான் நாங்கள் இதை தயாரிப்போம் என்று கூறி இருக்கிறார்கள். இதனால் மகளுக்காக இந்த படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மேலும் கடந்த தேர்தல் நேரத்தில் ரஜினியை இஸ்லாமிய மதத்திற்கு எதிரானவர் என்பது போல் சிலர் சித்தரிக்க முயன்றனர். ரஜினி பாஜகவின் நண்பர் என்பது போல் பல அரசியல் கட்சிகளும் விமர்சித்து இருந்தார்கள். இதனை உடைக்கும் வகையில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டிருக்கிறார்.ரஜினி எப்போதுமே தன்னுடைய ரசிகர்களை சாதி மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவராக தான் இருக்க வேண்டும் என கருதுவார்.
தற்போது இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் நடிகர் ரஜினியின் ரசிகர்களும் இஸ்லாமியர்களின் ஆதரவாக இருப்பார்கள்.மேலும் இந்தப் படம் தற்போது இருக்கும் நாட்டு சூழலுக்கு எதிராக பேசுவது போல் இருக்கும். மேலும் சாதி மத அனைத்தையும் கடந்து ஒற்றுமையை போதிக்கும் கதையாக இது இருக்கும் என எதிர்பார்க்கலாம் என்று பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.