நைஜீரியாவில் சோகம் – படகு கவிழ்ந்த விபத்தில் 17 குழந்தைகள் உயிரிழப்பு!

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலம் சொகோடோ அருகே படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 17 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் பலர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சொகோடோ அருகே இருக்கும் பகுதி ஒன்றில் விறகு சேகரிக்க 20-க்கும் மேற்பட்டோர் படகில் கிளம்பியுள்ளனர். படகில் சிறுவர், குழுந்தைகள் உள்ளிட்டோரும் பயணம் செய்துள்ளனர். படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழந்தது.
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. படகில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி செல்வது, மோசமான பராமரிப்பு மற்றும் மழைக்காலத்தில் அங்கு அடிக்கடி ஏற்படும் வெள்ளம் போன்ற காரணங்களால் படகு கவிழும் விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுகிறது.
அந்த வகையில் நேற்று ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 13 சிறுமி, 2 சிறுவன்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் படகில் பயணம் செய்து காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.