பொலிஸ்மா அதிபருக்கு மீண்டும் பதவி நீடிப்பு!

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் நீடிக்கப்படவுள்ளது என
உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் 26 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜூன் 26 ஆம் திகதி வரை மூன்று மாத பதவி நீட்டிப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 26 ஆம் திகதியிலிருந்து அடுத்த வருடம் வரை அவரது பதவிக் காலம் மேலும் நீடிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அடுத்த பொலிஸ்மா அதிபர் பதவியைக் குறிவைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் சிலர் ஆவலுடன் காத்துக்கிடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.