வழக்குகளை சட்டரீதியாக சந்திப்பேன்- அண்ணாமலை பேட்டி.
முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆவின் நிர்வாத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாக ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். பால் விலையை புதிய அமைச்சர் குறைக்க வேண்டும்.
சாராய உற்பத்திக்காகவே தொழில் துறை டி.ஆர்.பி.ராஜா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலு என் மீது வழக்கு தொடர்ந்திருப்பது நகைப்புக்குரியது. வழக்கிற்கு பயந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை ஒருபோதும் குறைக்க மாட்டேன். என் மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டரீதியாக சந்திப்பேன்.
ஆடியோ காரணமாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றப்பட்டிருப்பது தவறு. 3 தலைமுறையாக மாநில வளர்ச்சிக்கு அர்ப்பணித்து கொண்டது என பி.டி.ஆர். குடும்பத்தை பாராட்டினார் முதலமைச்சர். ஆடியோவில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியது உண்மை தான்.
பி.டி.ஆர். ஆடியோ வெளியிட்டதற்காக என் மீது வழக்கு தொடருங்கள். வழக்கு தொடர்ந்தால் ஆடியோவின் உண்மை தன்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும்.
1461 கோடி நஷ்ட ஈடு கேட்டு தி.மு.க.வினர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.