இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறையவுள்ளது
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை குறைப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன்படி, பால் மா இறக்குமதியாளர்களுக்கும் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒரு கிலோவை 200 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலையும் குறைக்கப்படும். இந்த விலை குறைப்பு மே 15ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.