ரூ.12ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் கொச்சியில் பறிமுதல்
கப்பலில் கடத்தி வரப்பட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கொச்சி அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க இந்திய கடற்படையுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, அரபிக் கடலில் அதிகளவிலான போதைப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று இந்தியா வருவதாக தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் கொச்சி அருகே ஒரு கப்பலை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். அந்தக் கப்பலில், 134 மூட்டைகளில், 2 ஆயிரத்து 500 கிலோ மெத்தம்பட்டமைன் என்ற போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கொச்சி அருகே மட்டஞ்சேரிக்கு கொண்டு வரப்பட்டன.