டீக்கடையில் ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டி அசத்தும் தமிழக இளைஞர்!
தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் டீக்கடையில், ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது தற்போது பேசு பொருளாகியுள்ளது.
உலகம் முழுவதும் தேநீர் என்பது புத்துணர்ச்சி அளிக்க கூடிய அனைவரும் விரும்பி குடிக்க கூடிய பொதுவான பானமாகும். தமிழகத்தில் எத்தனையோ பேர் தேநீர் கடையை வைத்து கொள்ளை லாபம் பார்த்திருக்கிறார்கள்.
ஒரு டீ கடையை எந்த மாதிரி நாம் அலங்கரித்து, காட்சிப்படுத்துகிறோமோ அதைப் பொருத்து தான் வாடிக்கையாளர்கள் வருவார்கள். இந்த அவசர உலகத்தில் மனிதர்கள் டீ குடிக்கும் சமயங்களில் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்.
தேனை பருகுவதற்கு மலரில் வண்டுகள் அமர்வது போல, டீ குடிக்கும் தருணமும் மன அமைதியை அளிக்க வேண்டும் என நினைப்பார்கள். அது போல டீயின் சுவையும் தரமாக இருக்க வேண்டும்.
இப்படி எல்லா சாத்தியக்கூறுகளும் அடங்கிய பிளாக் பெக்கோ என்ற டீக்கடையை, தமிழக இளைஞர் ஜோசப் ராஜேஷ் நடத்தி இன்று கோடீஸ்வரனாகியுள்ளார்.
பிளாக் பெக்கோ மற்றும் டீ பாய் சாய் நிறுவனரான ஜோசப் ராஜேஷ், தமிழ் நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள மொச்ச கொட்டம் பாளையம் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.
தேநீர் சங்கிலித்தொடர் நிறுவனத்தை தொடங்கி, வெற்றி பெற்ற பல இளைஞர்கள் வரிசையில் தற்போதும் அவரும் இணைந்திருக்கிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை வேளைச்சேரியில் 100 சதுர அடி தேநீர் கடையை ரூ.50000 முதலீட்டில் துவங்கிய அவர், தமிழ்நாடு முழுவதும் பிக்பில்லி அன் ஃபுட்&பீவரேஜஸ் பிரைவட் லிமிடேட் என்ற பெயரில் 70 சங்கிலி தொடர் கடைகளை கட்டமைத்துள்ளார்.
“2020-2021ல் எங்களது வருமானம் 7 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது நிதி ஆண்டில் ரூ.10 கோடியை தாண்டுவோம் என நாங்கள் நம்புகிறோம். இந்த ஆண்டும் 60க்கும் மேற்பட்ட தேநீர் கடைகளை நாங்கள் திறந்துள்ளோம்’ என்கிறார் ஜோசப்.
பிளாக் பெக்கோ பிரான்ஞ்சைஸ்க்காக ரூ.6-7 லட்சம் ரூபாய் ஜோசப் வசூலிக்கிறார். அவருடைய நிறுவன உள்கட்டமைப்பு வசதிகளை வடிவமைத்து கொடுக்கிறது. மூலப் பொருட்களையும் விநியோகிக்கிறது. பிரான்ஞ்சைஸ்களுக்கான பயிற்சிகள் மற்றும் கடைகளை நடத்த ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கின்றனர்.
“டீ பாய் கடைகள் சிறியவைதான் என்றாலும் பொதுவாக அவை 100-200 ச.அடிக்குள்தான் இருக்கின்றன. இந்த கடைகளில் இரண்டு முதல் மூன்று வகை தேநீர் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றோம்,” என்றார் ஜோசப்.
பிளாக் பெக்கோ கடைகள் பெரியவை. ஒரு பெரிய கடையானது 1.500 ச.அடி கொண்டது. அங்கு இஞ்சி தேநீர், மசாலா தேநீர், ஏலக்காய் தேநீர், எலுமிச்சை புல் தேநீர் மற்றும் இஞ்சி துளசி தேநீர் போன்ற பல்வேறு வகையான விரிவான தேநீர் ருசிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.