கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றதை அடுத்து , முதல்வர் போட்டி?
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டியில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டிகே சிவகுமார், எம்பி பாட்டீல், ஜி பரமேஸ்வரா உள்ளனர்.
பெங்களூரில் காாங்கிரஸ் கட்சியின் சார்பில் வென்ற 136 எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகி இருந்தன. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
கர்நாடகாவில் முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க எம்.எல்.ஏக்கள் வருகை தர தொடங்கியுள்ளனர். இதனிடையே, டிகே சிவக்குமார் தான் முதல்வர் என்று அங்கு திரண்டுள்ள அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸில் முதல்வர் பதவியை பெறுவதில் டிகே சிவக்குமாருக்கு பெரிய பிரச்சனை உருவாகி உள்ளது. இதனால் சித்தராமையா மீண்டும் முதல்வராக அதிக வாய்ப்புள்ளது. இதற்கிடையே தான் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போவதற்கான முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.
இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது. காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியையும் பெற்றது. கர்நாடகாவில் 113 இடங்களில் வென்றால் ஒரு கட்சியால் தனித்து ஆட்சியை பிடிக்க முடியும்.
இத்தகைய சூழலில் தான் நேற்று காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 66 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றது. மற்றவர்கள் 4 தொகுதிகளில் வென்றனர். இதன்மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தான் தற்போது காங்கிரஸ் கட்சியின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் முதல்வர் பதவிக்கு 2 பேர் டாப் லிஸ்ட்டில் உள்ளனர். முதலிடத்தில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவின் பெயர் உள்ளது. 2 வது இடத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டிகே சிவக்குமாரின் பெயர் இருக்கிறது. இதில் சித்தராமையா மைசூர் மாவட்டம் வருணா தொகுதியிலும், டிகே சிவக்குமார் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர். சித்தராமையா 46 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் டிகே சிவக்குமார் 1.21 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.